தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்களின் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.