தமிழக அரசின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
எனவே மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு இலவச லேப்டாப்புகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை செய்த தலைமை நீதிபதி, இலவச லேப்டாப் திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் அதை வழங்கலாமே என்று கூறினார். மேலும் இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.