Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி மூதாட்டியிடம்…. உள்ளாடைகளை கழற்றி சோதனை…. பெரும் பரபரப்பு…..!!!!!!

அஸ்ஸாமில் குவஹாத்தி விமான நிலையத்தில் இடுப்பில் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி சக்கர நாற்காலியில் வந்த பயணியிடம் ஆடையைக் கழற்றி சோதனை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலரை மத்திய தொழில் பாதுகாப்புபடை இடைநீக்கம் செய்துள்ளது. லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் தன் பேத்தியுடன் வந்திருந்த மூதாட்டி, தில்லிக்கு செல்ல இருந்தார். நாடு முழுவதும் குவஹாத்தி உட்பட 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு அளித்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

அதாவது “பயணிகளின் பாதுகாப்பும் கண்ணியமும் ஒன்றுகொன்று தொடர்புடையது ஆகும். குவஹாத்தி விமான நிலையத்தில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புபடை முன்பே விசாரணையை தொடங்கியுள்ளது. ஆகவே இதில் சம்மந்தப்பட்ட காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. பயணியிடம் பேசியுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்துள்ளார்.

இதற்கு முன்பாக இது தொடர்பாக அந்த மூதாட்டியின் பேத்தி டோலி கிகான் ட்விட்டரில், “குவஹாத்தி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை சோதனையின் போது என் 80 வயது மாற்றுத்திறனாளி அம்மாவின் ஆடைகளை அகற்றினர். மேலும் அவரது இடுப்பில் டைட்டானியம் பொருத்தப்பட்டதற்கு ஆதாரம் கேட்டு அவரின் ஆடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தினர். அதுமட்டுமின்றி என் 80 வயது மாற்றுத்திறனாளி அம்மா அவரது உள்ளாடையை கழற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். எதற்காக..? ஏன்..?” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள மத்திய பாதுகாப்பு படையின் மூத்த அலுவலர், “அந்நபரின் உடலில் உலோகம் இருப்பதைக் குறிக்கும் அடிப்படையில் டிடெக்டர் சத்தம் போட்டது. இதன் காரணமாகமே ஆடையை கீழே இழுத்து காண்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் கூறினார்கள். ஆகவே விதிகளின் அடிப்படையில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் அத்தகைய சூழ்நிலைகளில் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறையையே பின்பற்றியுள்ளனர்” என்று கூறினர்.

Categories

Tech |