மாவட்ட ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாமை தொடங்கி வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் நெல், அரிசி வியாபாரிகளின் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
மேலும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். இந்த முகாமில் ஜே.எல் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரசபை தலைவர் தேவி பெனஸ் பாண்டியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.