15 ஆண்டுகளில் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கான வசதிகள் சரியாக செய்து கொடுக்காதது ஏன் என போக்குவரத்துத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 15 ஆண்டுகளாக பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அமர்ந்து பயணம் செய்வதற்கான வசதிகள் ஏன் செய்து கொடுக்கவில்லை என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும் தலைமைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஆகியோர் டிசம்பர் 10 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் ஆஜராகி இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.