Categories
சினிமா தமிழ் சினிமா

மாற்றுத் திறனாளிகளுக்காக…. மின்னஞ்சலில் பாடி நிதி திரட்டும் பிரபல பாடகி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி, மூன்று வெவ்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலமாக மாற்றுத்திறகுடும்பங்களுக்குத் தேனுடைய 300 குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்ற உதவ நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் [email protected] என்ற மின்னஞ்சலில் கேட்கும் பாடல்களை அவர்களுக்கு பிரத்தியேகமாக பாடி நிதி திரட்டி வருகிறார்.

Categories

Tech |