Categories
மாநில செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கவிருக்கிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் அரங்கிற்கு பின்னால் சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இந்த சிறப்பு முகாம் மார்ச் 29, 30, 31 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த பேருந்து அட்டை 2022-23 ஆம் ஆண்டு வரை ஒரு வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த முகாமில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியோர், கண் பார்வையற்றவர்கள், கை, கால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்துகொண்டு புதிய பேருந்து அட்டைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதனையடுத்து இலவச பேருந்து அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு போட்டோ 3 தனித்துவ அடையாள அட்டை நகல் 2, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை 2, கை, கால் இயலாதோர், கண் பார்வையற்றவர், காது கேட்காதோர் மற்றும் வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றியோர் கல்லூரி மற்றும் சிறப்பு பள்ளிகளுக்கு செல்வோர் கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று, தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் பணிபுரியும் சான்று, சுயதொழில் செய்பவர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்ற சான்று, சிகிச்சைக்காக மருத்துவமனைகள் செல்பவர்கள் மருத்துவரிடம் சான்று ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். மேலும் இந்த முகாமில் பேருந்து பயண அட்டைகள் விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக இலவச பேருந்து அட்டை வழங்கப்படும்.

Categories

Tech |