Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்….. மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமை தாங்கினார். இவர் கூட்டத்திற்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவித் தொகைகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் உங்களுடைய கோரிக்கைகள் கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

Categories

Tech |