Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு…. இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை வழங்கிய கலெக்டர்..!!

பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதற்கு முன்  மாற்றுத்திறனாளிகள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு நேரில் சென்ற கலெக்டர் அவர்களிடம் இருந்து 39 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர்களில் 3 பேருக்கு தலா ரூ 78,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய ஸ்கூட்டியை கலெக்டர் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர்  உதவித்தொகை, விதவை, கடனுதவி, பட்டாமாறுதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், காவல்துறை தொடர்பான மனுக்கள் உட்பட பல கோரிக்கைகள்  அடங்கிய மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார். மொத்தம் 273 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |