Categories
கள்ளக்குறிச்சி

“மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்”… இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன செயற்கை கால்கள்…. வழங்கிய கலெக்டர்…!!!

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், நவீன செயற்கை கால்களையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கலெக்டர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அதில் மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர், செல்போன்கள், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான 359 மனுக்கள் பெறப்பட்டன. அதன்பின் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ 2, 35,500 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர் களையும், 5 பேருக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 3 லட்சம் மதிப்பில் நவீன செயற்கை கால்களையும் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது, தகுதி இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்த திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்று பயனடைய வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |