கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 துணை தேர்வு எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பெண்களை அரசு பள்ளி கல்வித்துறை அமைப்பு வெளியிட்டது. இதில் திருப்தியில்லாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது.
அதுமட்டுமில்லாமல் பிளஸ் 2 துணைத் தேர்வை தனி தேர்வாக எழுத மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இப்படி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்திருந்தார். இதுபோன்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்குவது குறித்த நடவடிக்கை வடிவமைத்து உரிய ஆவணங்கள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி என்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.