Categories
மாநில செய்திகள்

“மாற்றுப்பணி ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக இல்லம் தேடித் திட்ட கட்டடங்கள், தயாரிப்பு பணி, மொழிபெயர்ப்பு பணி, பாடப்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களின் நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் 7500, 10,000, 12 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களின் நியமித்துக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |