ரயில்களில் குறைந்த கட்டணத்தில் ஏசி பெட்டியில் பயணிக்க கூடிய வகையில் மூன்றாம் வகுப்பு ஏசி ஏகானமி என்ற புதிய வகை பெட்டிகள் முக்கிய விரைவு ரயில்களில் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் வகுப்பு எகானமி ஏசி பெட்டிகளிலும் மாற்று திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவு, மெயில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் தலா நான்கு படுக்கை வசதியும், 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா இரண்டு படுக்கை வசதிகளும் ஒதுக்கப்படுகின்றன. அதனைப் போல மூன்றாம் வகுப்பு ஏகனாமி ஏசி படுக்கையில் தலா இரண்டு படுக்கை வசதிகள் ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.