Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” மாற்று திறனாளிகள் கவனத்திற்கு” 8,9-ஆம் தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன்  ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் வருகின்ற 8-ஆம்  தேதி சிங்கம்புணரியிலும், 9- ஆம் தேதி சிவகங்கையிலும்   மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதார் அட்டை, தேசிய அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் ஆகியவை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதனையடுத்து  இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், இருப்பிடச்சான்றிதழ் ஆகியவற்றை வைத்து  கலந்து கொள்ளலாம்.

மேலும்  ஏற்கனவே தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வித் தொகை, வங்கி கடன், போன்றவற்றிற்கான விண்ணப்பங்களும், ஆலோசனைகளும்  இந்த முகாமில் வழங்கப்படும். எனவே மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |