வாலிபர் மாலதீவில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டவிளை பகுதியில் பிரின்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் பிரின்ஸ் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இவர் அங்கு இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் கடந்த 9-ஆம் தேதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் உதவியுடன் பிரின்ஸின் சடலத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோர் மாலதீவுக்கான இந்தியா ஹை கமிஷன் அதிகாரிக்கு கோரிக்கை மனுவினை அனுப்பி வைத்துள்ளனர். அந்த மனுவில் மாலத்தீவில் பிரின்ஸ் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரேத பரிசோதனையுடன் தடவியல் சோதனை நடத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.