Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவுக்கு சென்ற நடிகை ஹன்சிகா … இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்… குவியும் லைக்ஸ்..‌.!!!

நடிகை ஹன்சிகா மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை ஹன்சிகாவுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்கள் நடித்து அசத்தியவர் . தற்போது இவர் மாலத்தீவுக்கு சென்று அங்கு எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களின் ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது .

சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு கொண்டாட சென்றிருந்தார் . இவரையடுத்து பிரணிதா சுபாஷ் ,வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், சமந்தா ஆகியோர் மாலத்தீவுக்கு சென்றனர். அங்கு சென்ற நடிகைகள் தாங்கள் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். தற்போது அந்த வகையில் நடிகை ஹன்சிகாவும் மாலத்தீவுக்கு சென்று விதவிதமான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் .

Categories

Tech |