மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் பவ்பவ் சீஸ்சே ஆகியோரை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதால், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பாபுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை இராணுவ கிளர்ச்சியாளர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவுகும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாட்டின் அதிபருக்கு எதிராக இரண்டு மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பில் பேசிய அதிபர் இப்ராஹிம் பவுபக்கர், ” தமது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது அதிகாரத்திற்காக மக்கள் ரத்தம் சிந்துவதை நான் விரும்பவில்லை” என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனேயோ குட்டரஸ் கூறுகையில், ” மாலியில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஐநா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. முதலில் அதிபரை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். அங்கு மீண்டும் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ், சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.