Categories
உலக செய்திகள்

மாலியில் கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்… 23 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய தாக்குதலால் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.அதனால் பொதுமக்கள் மீது குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டிலுள்ள சோ மற்றும் பாங்காஸ் ஆகிய இரு நகரங்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து நேற்று திடீரென தாக்குதல் நடத்தினர். அந்தக் கொடூரமான தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 12 பேர் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Categories

Tech |