கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி என்ற பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கணவன் என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் இரட்டை குளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருமண நாளான அன்று மணமகன் மண மேடையில் தயாராக நின்றிருந்தார். படம் மேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். பிறகு மணமகன் மணமகள் கழுத்தில் மாலையைப் போட சென்றார்.
அப்போது மாப்பிள்ளையை மணப்பேன் தடுத்து நிறுத்தினார். அதன் பிறகு திடீரென மேடையிலிருந்து கீழே இறங்கி ஓடினார். மணப்பெண் ரூமுக்குள் சென்ற உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். அதனால் மண்டபமே அதிர்ச்சி அடைந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மணமகள் வேறொரு நபரை காதலிப்பதாகவும் பெற்றோரின் கட்டாயத்தில் இந்த திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது