Categories
மாநில செய்திகள்

மாலை 5 மணிக்குள் வந்தால் வாக்களிக்க அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் கூறியதாவது, வாக்குச்சாவடிக்கு மாலை 5 மணிக்குள் வந்து காத்திருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 6 இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. இதனிடையில் 30 முதல் 40 மின்னணு இயந்திரங்கள் வரை பழுதடைந்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. பணப்பட்டுவாடா நடந்ததாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்..

Categories

Tech |