தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். இதனையடுத்தே தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள உள்ளார். அதில் முதன்மையானது கொரோனா பெருந்தொற்று. இது குறித்து அரசு அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் ஸ்டாலினை ஒருமனதாக தேர்வு செய்ய உள்ளனர்.அதைத்தொடர்ந்து எம்எல்ஏக்களின் கடிதத்துடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். வருகின்ற 7 ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.