புதுச்சேரியிலும் தமிழகத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மாலை ஏழு மணியிலிருந்து ஏழாம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகனப் பேரணி, கூட்டம் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிப்பதாக ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.