மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு பிரபல சீரியல் நடிகை ஒருவர் டப்பிங் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. மேலும் இந்த படம் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
இதில் தமிழில் நடிகை மாளவிகா மோகனனுக்கு ரவீனா டப்பிங் பேசியிருந்தார். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் மலையாள பதிப்பில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்தது சீரியல் நடிகை சுஜிதா என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதனை சுஜிதாவே சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது சுஜிதா விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.