நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் தனுஷ் உங்களை எப்படி அழைப்பார் எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன் ‘தனுஷ் என்னை மால்மோ என அழைப்பார்’ என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள், நண்பர்கள் மாலு என அழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.