சல்மான் கானுக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கயிருப்பதாக பரவி வந்த வதந்திக்கு ட்விட்டர் பதிவின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் இவர் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி இணையத்தில் பதிவிடுவார். இதன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி விட்டார்.
False article. Not true 🙂 Putting it out here as a lot of people have been asking me if I’m doing this. pic.twitter.com/Dvj2gRw3n6
— Malavika Mohanan (@MalavikaM_) May 26, 2022
இவர் தற்போது தெலுங்கிலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் பாலிவுட்டில் சல்மான் கானுடன் இணைந்து மாளவிகா நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகின்றது. இதுபற்றிய செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியுள்ளதாவது, இது முற்றிலும் பொய்யான செய்தி. இதை ஏன் இங்கே போடுகின்றேன் என்றால் பலரும் எனக்கு போன் செய்து தொல்லை செய்கின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி பதிவிட்டு இருப்பதாக கூறியுள்ளார்.