Categories
மாநில செய்திகள்

மாவட்டங்களுக்கும் மட்டும்…. பேருந்து இயக்க அனுமதி…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய தளர்வுகளை வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்நிலையில் இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்வு குறித்த அறிவிப்பில் தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டும் பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது .மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி கிடையாது என்றும், ஜவுளிக்கடை உள்ளிட்ட பெரிய கடைகளில் ஏசி இல்லாமல் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |