ஆந்திர மாநிலத்தில் கொனசீமா எனும் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி போன்ற பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக மாறி உள்ளது. அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி செய்தபோது அவை தோல்வியில் முடிந்துள்ளன. மேலும் போராட்டக்காரர்கள் அந்த மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ சதீஸ் போன்றோரின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தி இருக்கின்றனர்.
இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது இதனை தொடர்ந்து வன்முறை நடந்த பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் வன்முறை மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் விதமாக போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றது.