கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வரும் பயணிகளுக்கு இ – பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் தெரிவித்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 67 ஆயிரம் பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ -பாஸ் முறையை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.