Categories
தேனி மாவட்ட செய்திகள்

ரூ.70 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம்…. எங்கேன்னு தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

மதுரை-தேனி இடையில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 9:35 மணியளவில் தேனிக்கு வரும் இந்த ரயில், மாலை 6:15 மணியளவில் அங்கிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறது. ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரியகுளம், மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் அடிப்படையில் இந்த இருசாலைகளிலும் ரயில்வே மேம்பாலமானது அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மதுரை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்த மதிப்பீடு ஒப்புதல் பெறப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை வாயிலாக ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூபாய்.70 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்பின் ரயில்வே மேம் பாலம் அமைக்கும் பணிகளானது இன்று தொடங்கியது. இதற்காக மதுரை சாலையில் பொக்லைன் எந்திரம் வாயிலாக குழிதோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து வழித்தடம் மாற்றப்பட்டு, அதற்குரிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேனி தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது “தேனி-மதுரை சாலையில் பங்களாமேடு திட்டச் சாலை சந்திப்பு அருகில் தொடங்கி, மேரி மாதா மெட்ரிக் பள்ளி அருகில வரை சுமார் 1.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

இந்த பாலம் 15 மீட்டர் அகலத்தில் அமைகிறது என்பது குறிபிடத்தக்கது. ரயில் பாதைக்கு அடியில் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட இருக்கிறது. 2 வருடங்களில் இந்த மேம்பாலத்தை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கென போக்குவரத்து வழித்தடத்தில் சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை சாலை வழியே தேனிக்கு வரும் வாகனங்கள், மேரி மாதா பள்ளி அருகில் சாலையின் மையத் தடுப்பு சுவரிலிருந்து வலதுபுறமாக வரவேண்டும். தேனியிலிருந்து மதுரை மார்க்கமாக போகும் வாகனங்களும் அதே பாதையில் செல்லவேண்டும். மையத் தடுப்பு சுவரின் மற்றொரு பகுதியில் பாலம் வேலை நடைபெற உள்ளது” என்று கூறினார். தேனி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் ஆற்றுபாலம் மற்றும் சிறிய பாலங்கள் இருக்கின்றன. ஆனால் மேம்பாலம் எங்குமில்லை. இதன் வாயிலாக மாவட்டத்தில் அமையவுள்ள முதல் மேம்பாலம் இது என்பது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |