Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுதும் கடும் பனிப்பொழிவு…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!!

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனையடுத்து காலை 7:30 மணி வரை கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை இயக்கி செல்கின்றனர்.

மேலும் ரயில்களும் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே செல்கிறது. பகல் நேரங்களில் வெயில், திடீரென பெய்யும் மழை, அதிகாலையில் பனிப்பொழிவு என சீதோஷ்ண நிலை மாற்றம் அடைவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

Categories

Tech |