Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 82 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |