சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 26 பேரை கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இதுவரை காவல்துறையினர் 26 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 679 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.