Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. கெட்டுப்போன சிக்கன், காளான் விற்பனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…..!!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள், கடைகள் மற்றும் பேக்கரிகளில் சுகாதார மற்ற முறையில் உணவு தயார் செய்யப்படுகிறதா? காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை ஆணையாளர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஹோட்டல்கள், டீக்கடை மற்றும் பேக்கரிகள் போன்றவைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த ஆய்வின் போது குமலன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஏற்கனவே சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கிரில் சிக்கன், பொரித்த சிக்கன் மற்றும் காளான்கள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு கடையில் சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவுகளும் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதேபோன்று பழையபாளையம் பகுதியில் உள்ள ஒரு சைவ ஹோட்டலிலும் கெட்டுப்போன காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பேக்கரி மற்றும் டீக்கடைகளில் நியூஸ் பேப்பர்களில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் போன்றவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூபாய் 2000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்த ஹோட்டல்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதியும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |