Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. ஆதரவற்ற 64 பேர் காப்பகத்தில் சேர்ப்பு…. அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் முதியவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்றி கடும் பனிப்பொழிவில் சிரமப்படும் முதியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் முயற்சியில் போலீசாரும், சமூக நலத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 64 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

Categories

Tech |