Categories
மாநில செய்திகள்

மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொற்று  தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவந்தார்.

இந்நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், தொற்று குறைவாக உள்ள இரண்டாம் வகை பிரிவில் உள்ள திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள் பொது பேருந்து போக்குவரத்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, 50 சதவீத இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதி இல்லாமல் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |