இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு டிஎஸ்பி பரிசுகள் வழங்கினார்.
பொதுவாக மாணவ-மாணவிகள் படிப்பில் மட்டுமின்றி மற்றத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் விளையாட்டு துறைகளில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் உயர்கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதோடு விளையாட்டு துறைகளில் சாதனை படைக்கும் மாணவ- மாணவிகளை அரசு ஊக்கப்படுத்தி அவர்களை மாவட்ட, மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளிலும் கலந்து கொள்வதற்கான வழி வகைகளையும் செய்கிறது. இந்நிலையில் தர்மபுரியில் மாவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட இறகு வந்து சங்கத் தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு டிஎஸ்பி கலைச்செல்வன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த போட்டியில் இறகு பந்து சங்க உறுப்பினர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.