மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 21 அணிகள் கலந்து கொண்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோட்டில் உள்ள ஜெய்நகர் வித்ய விகாஷினி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கைப்பந்து போட்டியானது நேற்று முன்தினம் காலை தொடங்கியது. இதில் 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் என இரண்டு பிரிவுகளாக மாணவர்களுக்கு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
இப்போது மாவட்டம் முழுவதிலும் இருந்து 14 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 21 அணிகளாக பங்கேற்றார்கள். மேலும் இளையோர் பிரிவில் 11 அணிகளும் மூத்தோர் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்று விளையாடினார்கள். இதில் இளையோர் பிரிவில் வித்யா விகாஷினி பள்ளி அணியும் ஏவிபி பள்ளி அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றது. மூத்தோர் பிரிவில் வித்ய விகாஷினி பள்ளி அணியும் பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றது.