சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவி-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் பிரிவில் 17 அணிகள் கலந்து கொண்டது. இந்நிலையில் ஆண்கள் பிரிவில் செயின்ட் பீட்ஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 25-17, 12-25, 24-23 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர். இதனையடுத்து பெண்கள் சுற்றில் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பெண்கள் 25-23, 25-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியில் சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் அர்ஜுன் துரை, நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், தினகரன், ஸ்ரீகேசவன், சர்வதேச முன்னாள் கைப்பந்து வீரர் யோகநாதன், ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி சந்திரசேகர், எஸ்டிஏடி துணை பொது மேலாளர் மெர்சி ரெஜினா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான் அகாடமி குழுவின் நிர்வாக இயக்குனர் அர்ச்சனா மற்றும் வருமான வரி இணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.