ஈரோடு மாவட்ட அமைச்சர் சிலம்பம் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி பெருந்துறையில் நடைபெற்றுள்ளது. இந்த சிலம்பம் போட்டியில் 14 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் தரவரிசையில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு சண்டை போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
Categories