முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பரமக்குடியில் வசிக்கும் ஷர்மிளா என்ற மாணவி குண்டு எரியும் போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.
அந்த மாணவிக்கு மாநில தடகள சங்கத்தின் இணை செயலாளர் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளார். வருகிற 15-ஆம் தேதி திருவண்ணாமலையில் நடக்கவிருக்கும் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.