Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி…. “வெற்றிப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் பரிசு….!!!!!

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தூத்துக்குடி ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படியே அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு போட்டியில் கமலாவதி முதுநிலை பள்ளி மாணவி சுபதர்ஷினி முதல் பரிசும் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி அர்ச்சனா இரண்டாவது பரிசும் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரச மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா லட்சுமி மூன்றாவது பரிசும் பெற்றனர்,

மேலும் சிறப்பு பரிசாக திருச்செந்தூர் செந்தூர் முருகன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பரமேஸ்வரி மற்றும் தூத்துக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டார்கள். தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி மாணவி நர்மதா முதல் பரிசும், மாணவன் குமார் இரண்டாவது பரிசும் தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி மாணவி அஸ்வகர்னிஹா மூன்றாவது பரிசும் பெற்றனர்.

Categories

Tech |