Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த மாணவி…. குவியும் பாராட்டுகள்….!!!

போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே தேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இதில் கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஷர்மிளாதேவி 38 கிலோ தேக்குவாண்டா பிரிவில் கலந்து கொண்டார்.

இந்த மாணவி மாவட்ட அளவில் தங்கம் என்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஷர்மிளா தேவி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தங்கம் வென்று சாதனை படைத்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |