கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஓசூர் காமராஜர் காலணியில் இருக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
இதன் மூலம் மாணவிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இதனை அடுத்து சாதனை படைத்த மாணவிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, உடற்கல்வி ஆசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.