திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிலையில் ஜங்களாபுரம் கூட்ரோட்டில் இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபிஷேக், பிரசன்னா, யாஷினி, மோனிஷ் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து தனிஷ்கா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் தங்கவேல், முதல்வர் செண்பகாதேவி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
Categories