Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவில் இரண்டாமிடம்… அரசு பள்ளி மாணவிக்கு… சிறுசேமிப்புத் துறை சார்பில் பரிசு..!!

சிவகங்கையில் சிறுசேமிப்புத் துறை சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரை போட்டியை சிறுசேமிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் சிறுசேமிப்பு மற்றும் சிக்கனம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது. அதில் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பத்தாம் வகுப்பு புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி அஸ்லினா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.

அதே பள்ளியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரான செல்வகைலாஷ் கவிதை போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சி அளித்தற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியை ஜான்சி, லட்சுமி, கார்த்திகா ஆகியோரும், பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜூம், அந்த பள்ளியின் தலைமையாசிரியர் நாகேந்திரன் என்பவரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |