Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவல்…. ஆய்வில் சிக்கிய போலி மருத்துவர்கள்…. அதிரடி நடவடிக்கை….!!!!

போலி மருத்துவர்கள் மருத்துவர்கள் 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட மருந்துகள் ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான குழுவினர் திருக்கோவிலூர் பகுதியில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராமலிங்கம்(60), ரமேஷ் காந்த்(53) ஆகிய இருவரும் மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ராமலிங்கம் மற்றும் ரமேஷ் காந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |