மீன் கடைகளில் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் மக்களுக்கு தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் கடைகளில் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது தடை செய்யப்பட்ட மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 18 கிலோ ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்