தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அதில் ஜாதி பாகுபாடு காரணமாக 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கொடி ஏற்றுவதில் சிக்கல் இருந்தது. இதன் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் எனவும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அதன் பிறகு கிராம சபை கூட்டங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் முறையாக கலந்து கொண்டார்களா என்பதை உறுதி செய்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் ஏற்கனவே நான் கேட்டிருந்தேன். எனவே 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் முறையாக தேசிய கொடியை ஏற்றினார்களா என்பது குறித்தும், கிராம சபை கூட்டங்கள் ஒழுங்காக நடைபெற்றதா என்பது குறித்தும் ஒரு அறிக்கை தாக்கல் செய்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.