நெல்லை மாவட்டம் விக்ரமசிங்க புரத்தில் மூதாதியர் கல்லறையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயன்ற கணேசன் நெல்லி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கோட்டை விலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி நாடார் பெயரில் அதே பகுதியில் இருந்து 4.05 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு காலத்தியா பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு ஏக்கர் ஐந்து சென்ட் நிலத்தை கணேசன் மற்றும் அவரது சகோதரர்களும் விவசாயத்திற்காகவும் கல்லறை தோட்டமாகவும் பராமரித்து வருகின்றனர். இதில் 1967 ஆம் ஆண்டு முதல் 2015 வரை அவர்களின் தந்தை சுப்பிரமணி நாடார் உட்பட மூதாதியர்களின் ஏழு பேர் கல்லறைகள் உள்ளன. இவர்களின் இரண்டு ஏக்கர் நிலம் மற்றும் இவர்கள் காலத்தியா பிள்ளைக்கு விற்பனை செய்த இடம் மொத்தம் 4.05 ஏக்கர் நிலத்தை சிவராஜ் பாண்டியன் என்பவர் தனக்கு சொந்தமான நிலம் எனக் கூறி அபகரிக்க முயற்ச்சித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிவராஜ் பாண்டியனின் குடும்பத்தினர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் அத்துமீறி கல்லறைத் தோட்டத்தில் இருந்து மரங்களை வெட்டியும் கல்லறைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். இது குறித்து கணேசன் விக்ரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேசி நீதிமன்றத்தை அணுகி கொள்ளுமாறு தெரிவித்துவிட்டனர். இரு தரப்பினரும் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி சிவராஜ் பாண்டியன் குடும்பத்தினர் மீண்டும் அந்த இடத்தை வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் சர்வே செய்ய முயற்சித்துள்ளார். அப்போது கல்லறைகள் செயல்பட்டதாக கூறப்படுகின்றது.
இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையில் கணேசன் அவரது சகோதரர்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிவராஜ் பாண்டியன் தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகின்றது. காவல்துறையினர் மீதும் நம்பிக்கை இருந்தாலும் மூதாதையர்கள் கல்லறைகள் தேவைப்பட்டதாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க கணேசன் தரப்பினர் வந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்த கணேஷ்சன் கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.