மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா தீனா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், துணை மாவட்ட ஆட்சியர் தாரகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.